அந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் … 13 வருட சினிமா பயணத்தில் கறாரா கூறிய விஜய் சேதுபதி – நடந்தது என்ன?

Author: Shree
23 September 2023, 4:45 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

vijay sethupathi - updatenews360

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி. கடைசியாக அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல இளம் நடிகையுடன் நான் நடிக்க மாட்டேன் என விஜய் சேதிபதி கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ” “தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்தில் கீர்த்தி ஷெட்டிக்குத் தந்தையாக நடித்தேன். அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் தமிழில் ‘லாபம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டது.

krithi shetty - updatenews360

இதை அறிந்த நான் உடனடியாக படக்குழுவினரை அழைத்து, கீர்த்தி ஷெட்டிக்கு நான் அப்பாவாக நடித்துவிட்டேன். அவர் எனக்கு மகள் போன்றவர். அவருடன் என்னால் ரொமான்டிக்காக நடிக்க முடியாது. இது தர்மசங்கடமாக இருக்கும் என்று கூறி தவிர்த்துவிட்டேன்”.

மேலும், ‘உப்பெனா’ படத்தின் “க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். உன்னைவிட அவர் சில வருடங்களே சிறியவர் என்றேன். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 578

    1

    1