அந்த மனசு தான் சார் கடவுள்… உதவின்னு கேட்ட ஏழைகளுக்கு விஜய் சேதுபதி செய்த செயல்!
Author: Shree2 May 2023, 10:58 am
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி.
அவர் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்பது அனைவர்க்கும் தெரியும். நடிகர்களுக்கான வரையறைக்குள் சற்று தள்ளியே இருப்பார். தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே அவரிடம் இருக்காது. செருப்பு , சாதாரண சட்டை , தாடி, மீசையுடன் என எப்போதும் எளிமையாகவே தோன்றுவார்.
இந்நிலையில் தற்போது “பெப்சி யூனியனில் பணிபுரியும் தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க 250 பேருக்கு தலா ஒருவருக்கு ரூ. 50,000 கொடுத்து உதவியுள்ளார். மேலும் 30 லட்சம் தேவைப்பட அவரிடம் இதுகுறித்து கூற உட தனது உதவியாளர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியதாக பிரபல இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.