மொக்கை கதை நீட்டி கெஞ்சி கூத்தாடிய விக்னேஷ் சிவன்… இழுத்தடித்த விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டது ஏன்?
Author: Shree26 April 2023, 9:56 pm
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் 2012ம் ஆண்டு போடா போடி இத்திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த அப்படத்தில் கதையில் விஷயமே இல்லை என்பதால் பிளாப் ஆனது. அந்த படம் பெரிதாக யாருடைய கனத்தையும் ஈர்க்கவில்லை என சோகத்தில் இருந்துள்ளார் விக்கி.
அந்த எதிர்பாராத நேரத்தில் தான் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்கு போன் பண்ணி, நான் பீட்சா படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி பேசுகிறேன். உங்க படம் நல்லா இருந்துச்சு. அடுத்த படம் பண்ணீங்கன்னா என கூப்பிடுங்க நான் நடிக்கிறேன் என கூறினாராம்.
உடனே நானும் ரௌடி தான் கதையயை தயார் செய்து அவரிடம் போய் அப்ரோஜ் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். போடா போடி தோல்வி படம் என்பதால் அவரை நம்பி நடிக்க கொஞ்சம் தயங்கி கதையை கேட்டவிட்டு சரி பார்க்கலாம் இப்போ நான் பிஸி என்ற சொல்லிவிட்டு அனுப்பினாராம். பின்னர் சில ஆண்டுகள் சென்றுள்ளது. இதற்கிடையில் வேறு நடிகர்களிடமும் கேட்டுள்ளார். ஆனால் யாரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியிடம் சார்ர்ர்… அந்த படம்…? என கேட்டாராம். என்னடா இன்னும் உனக்கு ஹீரோ கிடைக்கல? சரி வா ஆரம்பிப்போம் என கூறிவிட்டு நயன்தாராவை சென்று சந்தித்து கதை சொல்லு அவங்கள ஹீரோயினா போடலாம் என நம்பர் கொடுத்து அனுப்பினாராம். இப்படிதான் இந்த படம் ஆரம்பித்தது. பின்னர் எதிர்பார்க்காத அளவிற்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.