தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.
தற்போது பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கை அனுபவத்தை குறித்து பேசினார்.
அப்போது, நான் வளர்ந்து வரும் திறமையுள்ள பல இயக்குனர்களுக்கு உதவி செய்யும் விதமாக கெஸ்ட் ரோல்களில் நடித்து கொடுப்பேன். ஆனால், எதற்கெடுத்தாலும் அவரை கூப்பிடுங்க என்று நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாதிரி படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்துவிடுகிறது. இதனால் நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனிமேல் கெஸ்ட் ரோல்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துவிட்டேன். அதே நேரத்தில் வில்லனாக நடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் வருகிறது. அதையும் நிறுத்திவிட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளதாம். கோடி ரூபாய் கொடுத்தாலும், வில்லன் மற்றும் கேமியோ ரோல்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அஜித்தின் ஏகே 63 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சந்தேகம்தான் என்று கூறப்பட்டு வருகிறது. அப்படி இந்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொண்டால் மார்க் ஆண்டனி படத்தில் கலக்கி SJ சூர்யா போல் விஜய் சேதுபதிக்கும் நல்ல கதாபாத்திரம் அமையும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.