நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2025, 6:28 pm
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றவர் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி. இவர் சிகப்பு ரோஜாக்கள் படம் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்க : சமந்தாவுக்கு போட்ட அதே கண்டிஷன் : திருமணத்திற்கு பின் சோபிதா எடுத்த திடீர் முடிவு!
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த வடிவுக்கரசி, சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது போக 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி தான் எனக்கு இறுதிச்சடங்கு செய்யணும்
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றி, எனக்கு கடைசி காலத்துல ஏதாவது ஆச்சுனா, விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு வேலைகைளை செய்யணும். இதை நான் அவரிடமே கூறியுள்ளேன். அதற்கு ஏம்மா இப்படி சொல்றீங்க என்று கேட்டு வருத்தப்பட்டார்.
தமிழ் சினிமா பொறுத்தவரை, விஜயகாந்த்துக்கு பிறகு விஜய் சேதுபதி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். கேப்டனோட ஆத்மாவா விஜய் சேதுபதி இருக்காருனு நான் நம்பறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் கூட அந்த குழுவை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு மண்டபம் புக் பண்ணி சாப்பாடு போட்டிருக்காரு என நெகிழ்ச்சி பொங்க கூறினார்.