அட நம்ம விஜய் சேதுபதி மகனா இது? மீசை, தாடின்னு ஹீரோ லுக்கில் கெத்தா இருக்காரே!
Author: Shree13 June 2023, 2:47 pm
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பப்ளி லுக்கில் சிறுவனாக இருந்த சூர்யா சேதுபதி தற்போது தாடி மீசை என ஆளே மாறி ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாக ரசிகர்கள் எல்லோரும் செம ஷாக் ஆகி லைக்ஸ் குவித்துள்ளனர்.