அருவருக்க தக்க கெட்ட வார்த்தையால் திட்டினாரா விஜய் சேதுபதி? வெளியான ஆதாரம்!
Author: Shree27 March 2023, 10:22 pm
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.
பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பல்வேறு கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும், அந்த கெட்டவார்த்தைகளின் லிஸ்ட் அடங்கிய சென்சார் சர்டிபிகேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் இவ்வளவு மோசமான வார்த்தைகளை விஜய் சேதுபதி தான் பேசுகிறாரா? என ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் எல்லாம் சென்சார் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.