பொன் விழா நாயகனுடன் கைகோர்க்கும் கிருத்திகா உதயநிதி.. Comeback கிடைக்குமா?

Author: Hariharasudhan
18 February 2025, 2:12 pm

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளதாகவும், எனவே, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, இதற்குப் பிறகு காளி என்ற படத்தை இயக்கினார். பின்னர், பேப்பர் ராக்கெட் என்ற வெப்சீரிசை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை.

Kiruthiga Udhayanidhi next film with Vijay Sethupathi

ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால் மற்றும் லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு உருவான இந்தத் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!

மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதி காந்தி டாக்ஸ், ஆஸ் மற்றும் ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை மிர்ச்சி சிவா, விஜய் ஆண்டனி, ரவி மோகன் உள்ளிட்டோருடன் பணியாற்றிய நிலையில், குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என அனைத்து இடங்களிலும் கலக்கி வரும் விஜய் சேதுபதியுடன் கைகோர்ப்பது உறுதி செய்யப்பட்டால், அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply