Low பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு Box office’யே சிதறவிட்ட விஜய் சேதுபதியின் 5 மெகா ஹிட் படங்கள்!
Author: Shree24 October 2023, 12:16 pm
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி. கடைசியாக அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியை நடிப்பில் லோ பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய அளவில் லாபம் கொடுத்த 5 மெகா ஹிட் திரைப்படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
- 5. ரூ. 1.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பீட்ஸா திரைப்படம் சுமார் ரூ 8.கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி
சாதனை படைத்தது. - 4. வெறும் ரூ. 80 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் திரைப்படம் ரூ. 6
கோடி வசூல் செய்தது. - 3. சூதுகவ்வும் திரைப்படம் ரூ. 2 கோடியில் எடுக்கப்பட்டு சுமார் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி
பாக்ஸ் ஆஃபீஸையே சிதறவிட்டுச்சி. - 2. தமர்துறை திரைப்படம் ரூ. 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 20 கோடி வசூல் ஈட்டி சாதனை செய்தது.
- 1. வெறும் ரூ. 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சேதுபதி படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி தயாரிப்பாளர் மனதை குளிரச்செய்தது.