சத்தியமா பொய்… கவனத்தை ஈர்க்கபோகும் வித்யாசமான விஜய் சேதுபதி!

Author: Rajesh
3 February 2024, 8:28 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

vijay sethupathi - updatenews360 g

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் கடைசியாக நடித்தார் நடித்துள்ளார்.

vijay sethupathi - updatenews360

டுத்ததாக விஜய் சேதுபதி தனது 51 வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் உடன் கூட்டணி வைத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி VJS51 படத்தின் டைட்டில் “சத்தியமா பொய்” என வைத்துள்ளனர்.காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது. இதன் டைட்டில் சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்கள் கூறு வருகிறார்கள்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 516

    0

    0