விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்து விட்டது. 7 சீசன்களில் கலந்துக்கொண்ட பல பிரபலங்கள் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ திறமைசாலிகளை முகம் அறிய செய்து பிரபலம் ஆக்கிய பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேரும். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கடைசி வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் சமீபத்தில் இனிமேல் நான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து விலகினார் .
இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அடுத்தது யார் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவார்? என்ற கேள்வி மக்களிடையே சுவாரஸ்யத்தை எழுப்பியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று விஜய் டிவியில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.
அதாவது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் ஆரவாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக ரூ.120 கோடி முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.