உயிர்ப்ப உளரல்லர்; அடங்காத கோபம்; திருக்குறளை சுட்டி வெளியிடப்பட்ட விடுதலை 2 ; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி
Author: Sudha17 July 2024, 5:09 pm
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது படக்குழு தரப்பில் இருந்து விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் விஜய் சேதுபதி கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் மிகுந்த கோபத்துடன் இருக்கின்றார். மற்றொன்றில், சைக்கிளைப் பிடித்தபடி, மஞ்சு வாரியருடன் நிற்கிறார். ஒரு போஸ்டரைப் பார்த்தால் ரத்தம் தெறிக்கிறது, மற்றொரு போஸ்டரைப் பார்த்தால் காதல் ததும்புகிறது.
2 போஸ்டர்களிலும் உயிர்ப்ப உளரல்லர் எனத் தொடங்கும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது. விடுதலை 2 படத்தில் பெரும்பகுதி விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாகத்தான் இருக்கும் என்பது இந்த போஸ்டர் மூலம் தெரிய வருகிறது.