வெயிட் காட்டும் விஜய் சேதுபதி – சூரிக்கு சூப்பர் ஹிட் கொடுக்கப்போகும் “விடுதலை” ட்ரைலர்!

Author: Shree
8 March 2023, 9:11 pm

விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகி விபத்துக்குள்ளாகும் செய்தியோடு ஆரம்பிக்கும் இந்த ட்ரைலரில்பிறக்கும் போதே ஒருத்த மேல ஒருத்த கீழனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா ?


இல்ல.. சமுதாயத்துல எல்லாரு சமமா இருக்கணும் நினைக்குற நாங்க பிரிவினைவாதிகளா ? என்ற விஜய் சேதுபதியின் போராட்ட குரலோடு முடிவடைகிறது. இதில் சூரியின் நடிப்பு பாராட்டத்தக்கதாக நிச்சயம் அமையும் என எதிர்பார்க்கலாம். இதோ அந்த ட்ரைலர் வீடியோ:

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…