அத பத்தி கேட்காதீங்க வெட்கமகா இருக்கு … கத்ரீனா கைஃப் உடன் Lip-lock குறித்து விஜய் சேதுபதி கூச்சம்!

Author: Rajesh
8 January 2024, 3:52 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

இதனிடையே விஜய் சேதுபதி இந்தியில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைஃப் உடன் Merry Christmas என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது. அதன் ப்ரோமோஷன்களில் படு பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதி தற்போது கத்ரினா கைஃப் உடன் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர், கத்ரீனா கைஃப் உடன் லிப்லாக் காட்சியில் நடத்த அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு? ஐயோ… இப்படி டக்குனு கேட்டீங்கன்னா நான் என்ன சொல்றது? என வெட்கப்பட்டு சிரித்தார். மேலும் பேசிய அவர், காத்ரினா கூட நடிப்பதே ஆச்சரியம் தான். அவர் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதையே என்னால் நம்ப முடியல. என்னாலே எங்க ரெண்டு பேரையும் ஜோடியா கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இந்த இயக்குநர் எப்படி தான் யோசித்தாரோ? என கூறி சிரித்தார். ஒரே வார்த்தையில் சொல்லனும்னா என் கனவு நினைவானது என்றார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 375

    0

    0