விஜய் சேதுபதி வேஸ்ட்…. கமல் தான் பெஸ்ட் – வன்மத்தை கக்கிய ரவீந்தர்!

Author:
24 October 2024, 9:28 am

திரைப்பட தயாரிப்பாளராகவும் பிக் பாஸ் விமர்சகர் ஆகவும் இருந்து பிரபலமானவர் தான் ரவீந்தர். இவர் முதல் சீசன் இலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்ததால் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் 8 சீசனில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆம் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் தான் இவர் கலந்து கொண்டார் .

vijay sethupathy

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்த உடனே விஜய் சேதுபதி மீதான எதிர்பார்ப்பு மக்களின் மீது அதிகமாக விழத் துவங்கியது.

இதனால் விஜய் சேதுபதி கமல் ரேஞ்சுக்கு வருவாரா? அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா என எல்லோரும் சந்தேகித்து வந்த நிலையில் விஜய் சேதுபதி அதை சிறப்பாக செய்து வருகிறார். இப்படியான நேரத்தில் ரவீந்தர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

raveendhar

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டார். காரணம் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியாளர்களின் தொல்லை அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வெளியே வந்து போட்டியாளர்கள் நடந்துகொண்ட விதங்களை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார்.

அப்படியாக விஜய் சேதுபதி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை உருவ கேலி செய்தார்கள். எவ்வளவோ முறை எத்தனையோ பேர் என்னை உருவ கேலி செய்திருக்கிறார்கள்.

நான் அதை பற்றி எல்லாம் கவலைப்பட்டது கிடையாது. புடவை முடியாது ஒளியவும் முடியாது என்ற வசனத்திற்கு முழுமையாக செட்டான ஆள் நானாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு எல்லோரும் என்னை உருவ கேலி செய்தார்கள்.

இதையும் படியுங்கள்: நீ ஒரு ஆம்பளையா? படுக்கையில் கையும் களவுமா பிடிபட்ட அர்னவ் – வெளுத்து வாங்கும் திவ்யா – வீடியோ!

kamal_haasan

அங்கு இருந்தவர்கள் என்னுடைய முதுகில் குத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நான் அழுதேன். அந்த நேரத்தில் பிக் பாஸ் தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதி பெஸ்டா? அல்லது கமல்ஹாசன் பெஸ்டா என்று என்னை பொறுத்த வரைக்கும் கேட்டால் கமல்ஹாசன் தான் பெஸ்ட் என நான் சொல்வேன்.

கமல்ஹாசன் இடத்தை யாராலும் அடைய முடியாது. விஜய் சேதுபதி வித்யாசமான ஒரு ட்ரெண்ட் செட் பண்ணி கொண்டு இருக்கிறார் என ரவிந்தர் விஜய் சேதுபதி மீதுள்ள வன்மத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 150

    0

    0