சினிமா / TV

என் அப்பா ரூ. 500 தான் தறாரு…. அதனால் – சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி மகன்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் நட்சத்திர அந்தஸ்திலிருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் திரை பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது முயற்சியாலும் தனது விடாமுயற்சியால் இன்று முன்னணி நட்சத்திர ஹீரோ இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ராஜபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட விஜய் சேதுபதி சினிமா மீது இருந்த ஆர்வத்தால் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த வேலையை கூட விட்டுவிட்டு சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கலையை கற்றுக்கொண்டு சினிமா துறையில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பின்னர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு சீன ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த திரைப்படம் அவருக்கு சிறந்த படமாக வாழ்நாளில் பேசக்கூடிய படமாக அமைந்தது.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், சூது கவ்வும், தர்மதுரை உள்ளிட்ட தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அதஸ்தத்தை பிடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லன் கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து அதில் வெற்றியும் கண்டவர் விஜய் சேதுபதி. இவ்வளவு துணிச்சலான முடிவை எடுப்பதற்கு எல்லா நடிகர்களுக்கும் தைரியம் வந்து விடாது. அதுதான் இவரது வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விஜய் சேதுபதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக இந்த பணியை நடிகர் கமல்ஹாசன் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தொடர்ந்து பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குறிப்பாக அவரது பேச்சு தான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். வருகிற நம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் பிரமோஷனல் கலந்து கொண்ட சூர்யா வாய்விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்.

ஆம், என்னுடைய அப்பா விஜய் சேதுபதி தினமும் என்னுடைய செலவுக்கு வெறும் 500 ரூபாய் தான் கொடுக்கிறார். அது எனக்கு பத்தவில்லை அதனால் தான் நான் நடிக்க வந்தேன் என சூர்யா கூறியிருக்கும் இந்த விஷயம் இணையத்தில் வைரலாக அப்படிப்பட்ட ஒரு தந்தைக்கு இவ்வளவு இவ்வளவு மோசமான ஒரு மகனா என விமர்சித்த வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: மனைவிக்கு விவாகரத்து பயத்தை காட்டிய நாகர்ஜுனா… 30 வருஷமா தவிக்கும் அமலா!

முன்னதாக சூர்யா நான் வேறு அப்பா வேறு என்னுடைய அப்பாவின் மூலமாக நான் சினிமாவுக்கு வளர வரவில்லை என கூறியதை நெட்டிசன்ஸ் பயங்கரமாக ட்ரோல் செய்தனர். இப்படியாக சூர்யா அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் விஜய் சேதுபதிக்கு பெரும் தலைவலியாக தனது மகனே அமைந்துவிட்டார் என நெட்டிசன் கருத்து கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…

இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

6 minutes ago

VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..

அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…

55 minutes ago

மாமியார் போட்ட குத்தாட்டம்… மருமகனை கலாய்த்த ரசிகர்கள் : கனிமா பாட்டுக்கு VIBE ஆன நடிகை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…

1 hour ago

கோவையில் பயங்கரம்.. முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் : இளைஞர் குத்திக் கொலை!

கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…

2 hours ago

அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!

சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…

2 hours ago

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

17 hours ago

This website uses cookies.