விவாகரத்து வரை சென்றது உண்மை தான்… மனைவி காலில் விழுந்தேன் – விஜய் சேதுபதி!

Author: Rajesh
19 January 2024, 9:32 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

vijay sethupathy

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ஷங்கர் என தன்னுடன் நடித்த நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவரை குறித்து வெளியான கிசுகிசு குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியதற்கு, ஆமாம், அது உண்மை தான். நான் நடிகர் ஆன பிறகு எங்கள் வீட்டில் பயங்கர குழப்பம், விவாகரத்து வரை மனைவி சென்றுவிட்டார். அதன்பின் என் மனைவியின் கையில் காலில் விழுந்து சமாளித்து, அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்தேன் என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!