இவரே நெபோடிசம் Product தான்… இதுல இன்னொரு நெபோடிசம் இறக்குறாரு – விஜய் மகனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

Author: Shree
28 August 2023, 7:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோக்களை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா விக்னேஷ் சிவன் போன்ற அனுபவம் உள்ள இயக்குநர்களையே கதை சரி இல்லை என நீக்கியது. அப்படி இருக்கும்போது மிகப்பெரிய நடிகர் விஜய் அவரின் மகன் சஞ்சய் என்ற ஒரே காரணத்துக்காக அவரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை எதை நம்பி ஒப்படைகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்போ இனி திரைத்துறையில் திறமைக்கு மரியாதையை இல்லையா? என எல்லோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்யே இயக்குனர் எஸ். ஏ சந்திர சேகர் தன்னுடைய அப்பா என்ற அடையாளத்தில் தான் சினிமாவில் நுழைந்து வளர்ச்சி அடைந்தார். தற்போது இவரின் மகனையும் இறக்குகிறார் என இவரே ஒரு நெபோடிசம் Product தான்… இதுல இன்னொரு நெபோடிசம் இறக்குறாரு என திரைத்துறையில் நடக்கும் அரசியலை விமர்சித்து பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!