காருக்குள் பண்ற விஷயமா இது?.. பெண் தோழிகளுடன் விஜயின் மகன் லூட்டி வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
23 June 2023, 2:15 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட சஞ்சய்காக கதை எழுதி படம் இயக்கவிருந்தார். ஆனால், சஞ்சய் தற்போது தனக்கு இன்டர்ஸ்ட் இல்லை என்று கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருந்தார் சஞ்சய், அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் புதிய குறும்படத்தை இயக்கி வருகிறார். இதனால், விரைவில் ஒரு இயக்குனராக சஞ்சய் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கபட்டு வரும் நிலையில் விஜயின் மகன் சஞ்சய் குறித்து தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay son-updatenews360

அதாவது யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடலுக்கு காருக்குள் தனது ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் விஜய்யின் மகன் சஞ்சய் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தாலும் தற்போது திடீரென ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Jason sanjay vijay latest new dance video | viral ? | thalapathy vijay
  • Good Bad Ugly Teaser தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!
  • Close menu