விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!

Author: Selvan
21 February 2025, 10:02 pm

படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல் மீது செலுத்தி வருகிறார்,இந்த நிலையில் அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார்.

இதையும் படியுங்க: விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

தற்போது படப்பிடிப்பு 3 நாட்கள் கூட முடிவடையாத நிலையில்,லைக்கா நிறுவனம் இந்த படத்தை விட்டு விலகுவதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.நடிகர் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள இப்படத்தில் ஷூட்டிங் பணிகள் ஆரம்பித்த நாளில் இருந்தே,சிக்கல் வந்து கொண்டே இருப்பதாகவும்,இந்த சிக்கலை லைக்கா நிறுவனத்தால் சரிசெய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Vijay son Jason Sanjay film issues

மேலும் இந்த சிக்கல்களுக்கு விஜயின் அரசியல் பயணமும் காரணமாக கூறப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் ஜேசன் சஞ்சய்க்கு முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் படப்பிடிப்பில் வரக்கூடிய சிக்கல்களை சரியாக கையாள தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

லைக்கா நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சூழலில்,ஜேசன் சஞ்சய் படத்திலும் சிக்கல் இருந்து வருவதால் திரைப்படத்தை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி கொடுக்கும் வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!