விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப்போகும் விஜய்.. சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்..!

Author: Rajesh
2 July 2023, 3:00 pm

“தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

Vijaysangeetha_Updatenews360

ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில் லியோ படத்தில் விஜய் பாடிய நான் ரெடி பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளதாக சினிமா பிரபலம் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

actor vijay

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தற்போது சர்ச்சைக்குறிய வகையில் பேட்டிகளை அளித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் கூறி வருகிறார்.

bayilvan ranganathan-updatenews360

இப்படி ஒரு நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மிஸ்கின், விஜய், அதிபுருஷ் திரைப்படம் என பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில் விஜய்க்கு சுமார் 500 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், தாய், மனைவி, மகன் பெயரில் 3 திருமண மண்டபங்கள் இருப்பதாகவும், விரைவில் தயாரிப்பாளராக விஜய் அடியெடுத்து வைக்கவுள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், விஜய் தனது சொந்த production நிறுவனத்தை தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 685

    0

    0