சுறா முதல் லியோ வரை.. விஜய்யை சுத்தி சுத்தி அடிக்கும் மிருக தோஷம்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்..!
Author: Vignesh20 October 2023, 9:52 am
உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், நெட்டிசன்கள் லியோ படம் மொக்கை என்று கலாய்த்தும் வருகிறார்கள். மேலும், விஜய்யின் கடந்த 15 படத்தில் ஒட்டுமொத்த பிளாப்பான படத்தை வைத்தும் தற்போது கேலி செய்தும் வருகிறார்கள். ஒரு மீம்ஸ் புகைப்படத்தில் சுறா முதல் லியோ வரை பிளாப்பான படத்தை வைத்து மிருக தோஷம் இருக்கு உசாரா இருண்ணான்னு சொன்னா கேட்டா தானே.. என்று கூறிய மீம்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிருக தோஷம் இருக்கு உசாரா இருண்ணான்னு சொன்னா கேட்டா தானே.. #LeoReview #LeoDisaster pic.twitter.com/kBLCwzNcxP
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 19, 2023