திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2025, 1:39 pm

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும், தளபதி அரசியலுக்கு நுழைவதில் மற்றற்ற மகிழ்ச்சி.

விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்க வருகிறார். இந்த படத்தில் நரேன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்க: சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

அண்மையில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இந்த படதின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியானது. அமேசானன் பிரைம் இந்த படத்தை 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது கூலி படத்தை விட அதிகம்.

அதே சமயம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.55 கோடி கொடுத்து சன் டிவி கைப்பற்றியுள்ளது.

விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை ரொம்பவே டேமேஜ் செய்து வரும் நிலையில் படத்தை திமுகவின் சேனல் சன்டிவியே வாங்கியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

Jana Nayagan Satellite Rights Bagged by Sun TV

அது மட்டுமல்லாமல், ஒரு படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே சன்டிவியில் ஒளிபரப்பிவிடுவார்கள். பொங்கலுக்கு படம் வெளியானால், ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி பார்த்தால் வரும் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகிறது. ஆனால் ஏப்ரல் 14ல் படத்தை டிவியில் ஒளிபரப்புவார்களா என்பது சந்தேகம்.

காரணம், அடுத்த வருடம் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், ஏப்ரல் மாதம் விஜய்யின் ஜனநாயகன் படததை ஒளிபரப்பினால் அது தவெகவுக்கு செய்யக் கூடிய பிரச்சாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Vijay surrenders to Sun TV… Jana Nayagan stuck

ஆனால் சன் டிவியிடம் அந்த வேலையெல்லாம் நடக்காது. ஜனநாயகன் படத்தில் திமுகவுக்கு எதிரான வசனங்கள் இருந்தால் நிச்சயம் அது கட் செய்யப்பட்டு, ஒளிபரப்புவார்கள், அதுவும் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன என ப்ரோமோ வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஏற்கனவே பாதிக்கப்பட்ட வட்டாரங்கள் கூறுகிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?
  • Leave a Reply