பழசை மறந்து திருமண நாளை கொண்டாடிய விஜய்.. ஆனா, அவங்க மட்டும் மிஸ்ஸிங்..!
Author: Vignesh26 April 2023, 12:30 pm
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஆரம்பத்திலிருந்து காதலை முன்வைத்த படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இதனிடையே, விஜய்யின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட காரணத்தால் விஜய் மற்றும் அவரின் பெற்றோர் எஸ்ஏசி – ஷோபா உடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய் தனது அம்மா ஷோபா உடன் சேர்ந்து எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அததாவது, தன்னுடைய பெற்றோரின் 50-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட தான் விஜய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமண நாளை கொண்டாட எஸ்ஏசி மற்றும் சங்கீதா, குழந்தைகள் இந்த புகைப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.