அங்கேபோனதும் போன் போட்டு குடுடா.. தல – தளபதி நட்பு குறித்து பகிர்ந்த வெங்கட் பிரபு..!

Author: Vignesh
14 August 2024, 5:54 pm

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய அஜித் நடிப்பில் விடாமல் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில், அஜித்தின் திரை வாழ்கையில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாக பார்க்கப்படக்கூடிய மங்காத்தா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவருடைய இயக்கத்தில் தற்போது, கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு சுவாரசியமான பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதில், அஜித் குறித்து பேசிய வெங்கட் பிரபு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது அவரை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தேன். போறதுக்கு முன்னாடி விஜய் சார் கிட்ட அஜித் அண்ணாவை பார்க்க போறேன்னு சொன்னேன். அங்க போனதும் போன் பண்ணி குடுடான்னு உரிமையோடு சொன்னாரு, அஜித்தை பார்த்தவுடன் விஜய் சார் கிட்ட போன் போட்டு கொடுத்ததும், அவங்க ரெண்டு பேரும் அழகா சாதாரணமா இயல்பா சந்தோசமா பேசிட்டு இருந்தாங்க என்று வெங்கட் பிரபு அஜித் விஜய் நட்பு குறித்து பேசி உள்ளார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!