“அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்காக தான் சீரியல பாக்குறோம்” கோபியின் வீடியோவால் அதிர்ச்சியில் கமெண்ட் செய்த ரசிகர்கள்..!
Author: Rajesh5 March 2023, 12:00 pm
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இத்தொடரில் தற்போது கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
பாக்கியா – கோபி விவாகரத்து, கோபி – ராதிகா திருமண வாழ்க்கை, அம்ரிதா – எழில் காதல், பாக்கியாவின் புது பிசினஸ் என சுவாரஸ்யமாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், ஆங்கிலம் கற்பதற்காக பாக்கியலட்சுமி தனியாக வகுப்புக்கு செல்கிறார்.
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் – Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023
அங்கு பிரபல நடிகரான ரஞ்சித் அவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இனிவரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி – ரஞ்சித் காட்சிகள் தான் அதிகம் வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பாக்கியலக்ஷ்மி சீரியலில் நான் 3 வருடங்களாக 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன். எனக்கு இது போதும். இனி ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் இனி கோபியினுடைய காட்சிகள் குறைவாகவும் பழனிச்சாமி கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித் – பாக்கியலட்சுமி ட்ராக் தான் அதிகமாக வரப்போகிறது என சொல்லப்படுகிறது. சதீஷின் இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ‘அப்படி சொல்லாதீங்க, உங்களுக்காக தான் இந்த சீரியல பாக்குறோம்’ என்று அந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.