தலைவா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதான்.. நல்லவேளை தூக்கிட்டாங்க..!
Author: Vignesh27 June 2024, 4:17 pm
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல்கள் வந்தது.
ஆனால், தற்போது ஜீ நிறுவனம்தான் கோட்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டு கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக உள்ளார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய், அமலாபால், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்த தலைவா படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்தது. தலைவா படத்தின் டைட்டில் குறித்து தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, இப்படத்திற்கு முதன்முதலில் தலைவன் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டதாம். ஆனால், அது சில காரணங்களால் அந்த டைட்டில் கிடைக்காமல் போய்விட்டது. பின் தலைவா படத்திற்கு தளபதி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே, மணிரத்தினம் ரஜினி கூட்டணியில் தளபதி எனும் படம் வெளியாகி இருந்தது, அதை முறையாக ரைட்ஸ் வாங்கி படத்தில் வைக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து, கேட்க வேண்டும் என இயக்குனர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, மணிரத்தினத்தை நேரில் சந்தித்தபோது விஜய் உன்னுடைய படத்திற்கு ஒரு தனி அடையாளம் இருக்கிறது தளபதி படத்திற்கும் தனி அடையாளம் இருக்கிறது. இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என கூறினாராம். இதனால், தளபதி டைட்டில் வைக்காமல் இறுதியாக தான் தலைவா என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குனர் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.