ரஜினிக்கு பறந்த போன் கால்.. சம்பவம் செய்த விஜய்; என்ன விஷயம் தெரியுமா ?

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.

இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான நேற்று வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். 1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.

இதனிடையே, சினிமாவில் முன்னணி நடிகராக டாப்பில் இருக்கும் இவர் இப்போது கமிட் செய்துள்ள படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், அவர் நடிக்கப் போவதில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி பெயர் அறிவித்ததில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுக்கள் பல எதிர்மறை விமர்சனங்கள் என வருகின்றன.

அதன்படி விஜயின் கைவசம் தற்போது, இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் மற்றொரு திரைப்படம் தான் தளபதி 69 இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் தான் தளபதி 69 படத்தை தயாரிக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மேலும், கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, தனது வாழ்த்துக்களை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று விஜய் ரஜினிக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசியலில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்காக ரஜினிக்கு விஜய் நன்றி கூறி இருக்கிறாராம்.

மேலும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கான நோக்கம் என்ன என்பதை பற்றியும் விரிவாக சூப்பர் ஸ்டாரிடம் விஜய் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை இருந்தாலும், என்னதான் விஜய் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் மோதிக் கொண்டாலும், இருவரும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

8 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

9 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.