வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து செம்பருத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் திசை திருப்பினார்.
மேலும் படிக்க: அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!
தொடர்ந்து ஜீன்ஸ், ஜோடி, வின்னர் , லண்டன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார். ஈர்த்து வாழ்க்கையையே காலி செய்தது அவரது திருமண வாழ்க்கை தான். ஆம், பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
50 வயதாகும் பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட்டடித்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக ‘அந்தகன் ‘என்ற பெயரிடப்பட்ட படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.
மேலும் படிக்க: விவாகரத்தே ஒரு நாடகம்.. ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..!
அந்தகன் படம் வருகிற ஆகஸ்ட் 15 2024 வெளியாகிறது. தங்கலான் திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் வெளியாக உள்ளது. பிரசாந்த் மற்றும் விக்ரம் இருவருமே நெருங்கிய குடும்ப உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோத இருப்பதால் குடும்பங்களுக்குள்ளேயே போட்டியா என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பிரசாந்த் விஜய் மற்றும் பிரபுதேவா உடன் இருக்கும் போட்டோ உடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் விஜய் அந்தகன் படத்தில் பாடியிருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியீட மட்டும் போகிறாராம். சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் தான் இந்த பாடலை பாடியிருக்கிறார். நாளை இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வர உள்ளது.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.