மேடையில் நடிகையின் டிரஸ் குறித்து மோசமாக பேசிய பயில்வான்: வறுத்தெடுத்த ஜாக்குலின்..!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் நிறைய படங்களில் துணை நடிகராக தலைக் காட்டியுள்ளார். தற்போது சர்ச்சைக்குறிய வகையில் பேட்டிகளை அளித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் கூறி வருகிறார். சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பாரபட்சம் இன்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

என்ன தான் இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதை பயில்வான் ரங்கநாதன் நிறுத்தியபாடில்லை. இப்படி ஒரு நிலையில், விழித்தெழு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த நடிகையை பார்த்து தொடைக்கு மேல ஏத்தி டிரஸ் போட்டு இருக்கறத பாத்தாலே இவங்க தான் கதாநாயகின்னு தெரியுது என்று நடிகையின் ஆடையை விமர்சித்தார்.

அப்போது படக்குழுவை சேர்ந்த சிலர் அவர் கதாநாயகி இல்லை வில்லி என்று கூறினார். அதற்கு அப்படியா இன்னும் கொஞ்சம் மேலே தூக்கிக் அணிவது தான் பொதுமக்களே விரும்புகிறார்கள் என்று பெரிய நாயகியே கூறினார் என்று பயில்வான் சொல்லவே, எந்த நடிகை அப்படி சொன்னார் என்று நடிகர் சரவணன் ஷாக் ஆனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளளினி மற்றும் நடிகையுமான ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”இவருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. யார் யார் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, அவங்களோட கேரக்டர், எப்படி டிரஸ் பண்ணுவாங்க என்று அனைத்தும் இந்த ஆளுக்கு எப்படி தெரிகிறது. மிகவும் எரிச்சலாக இருக்கிறது. இது போன்ற நபர்களை எப்படி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் இவருடைய வாழ்க்கையில் இருக்கும் பெண்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

17 minutes ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

33 minutes ago

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

43 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

1 hour ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

2 hours ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

2 hours ago

This website uses cookies.