“3 நாளா எழுந்திருக்க கூட முடியல.. வாந்தி வருதுன்னு சொன்னாலும் விடாமா கொடுமை..” வைரலாகும் VJ ஜாக்லின் வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 8:00 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் – நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேன் பேஜ் பக்கங்களும் உள்ளன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி விஜே-க்கள் பலரும் மக்கள் பேவரைட். டிடி, கோபி, ம.கா.பா ஆனந்த், பிரியங்கா, ரக்ஷன் வரிசையில் பிரபலமாக இருந்து வந்தவர் VJ ஜாக்லின்.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமான இவர், சீரியல் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, சீரியலிலும் சரி, தொகுப்பாளராகவும் சரி, பெரிதும் காணப்படாத ஜாக்லின், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ அல்லது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதனை தொடர்ந்து, சமீபத்தில் வாந்தி, மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்யசொல்லி கொடுமை செய்வதாக ஜாலியான வீடியோ ஒன்றை ஜாக்லின் பதிவிட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…