கோலாகலமாக நடைபெற்ற சீரியல் நடிகர் திருமணம்…ஆஹா..ஜோடினா இதா ஜோடி ..!

Author: Selvan
28 November 2024, 2:30 pm

விஜய் டிவி நட்சத்திரங்களின் திருமணம்

தற்போது சினிமா பின்னணியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒரு பக்கம் அதே துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் பண்ணுவதும் அதிகரித்து கொண்டு வருகிறது.

Vijay TV Vetri Vaishnavi wedding

இது வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடந்து வருகிறது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலம் அடைந்த வெற்றி,தன்னுடைய காதலியான வைஷ்னவியை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

வைஷ்ணவி அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் இருவருடைய குடும்பத்தின் சம்மதத்தோடு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தது.

வெற்றி-வைஷ்ணவி புகைப்படங்கள்

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டியவுடன் நெற்றியில் முத்தமிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் வெற்றி.

Vetri and Vaishnavi love story

திருமணத்திற்கு பல சின்னத்திரை பட்டாளங்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் மனமார வெற்றி -வைஷ்ணவி ஜோடியை வாழ்த்திவருகின்றனர்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 203

    0

    0