யம்மாடியோ.. இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா? குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் இதோ..!

Author: Vignesh
5 April 2023, 3:33 pm

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

இந்நிலையில், Cook With Comali நிகழ்ச்சியின் 4-வது சீசனில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளிவந்துள்ளது. கோமாளியாக இருந்து குக்காக மாறி இருக்கும் சிவாங்கி ஒரு எபிசோடுக்கு மட்டும் 20 ஆயிரம் சம்பளமும், வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு ஒரு எபிசோடுக்கு 26 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

cook with comali - updatenews360

மேலும், தமிழ் பேசும் பிரெஞ்சு நடிகை ஆண்ட்ரியா ஒரே ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் சம்பளமும், பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக வரும் விஜே விஷாலுக்கு 25 ஆயிரம் கொடுக்கின்றார்கள்.

cook with comali - updatenews360

மேலும், நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரமும், 90களில் கிளாமர் நடிகையாக இடுப்பு மடிப்பை காட்டி இளசுகளை திணறடித்த நடிகை விசித்ரா ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் சம்பளம் வாங்கு கிறாராம். கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 35 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

cook with comali - updatenews360

பிரபலமான நடிகர் மைம் கோபிக்கு ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். மைம் கோபி தான் சீசன் 4 நிகழ்ச்சியில் இருக்கும் பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

cook with comali - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1352

    9

    3