ஐயோ பாவம்.. டிடி-யின் சொத்து மதிப்பு இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே..!

Author: Vignesh
30 March 2024, 1:50 pm

ஐயோ பாவம்.. டிடி-யின் சொத்து மதிப்பு இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே..!

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 39 வயதாகும் DD இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் டிடி தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், டாப் விஜேவாக இருக்கும் டிடி-யின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும், இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!