விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் புகழ். தற்போது வெள்ளித்திரைகளில் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வர குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குக் வித் கோமாளி இவருக்கு நல்லதொரு பெயரையும் நல்ல பிரபலத்தையும் கொடுத்ததால் இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. இந்த நிலையில் புகழ் தனது அன்பு மகளின் முதலாவது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.
இதையும் படியுங்கள்: வெளிய சொன்ன வெட்கக்கேடு…. பண விஷயத்தில் ஏமாற்றிய மாமியார்… ஆர்த்தி ஓவர் சந்தேகம்.. எப்படி வாழ முடியும்? .
மகளின் அழகான பிறந்தநாள் புகைப்படங்களை பதிவிட்டுள்ள புகழ் அந்த பதிவில், முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கூறி வாழ்த்தி இருக்கிறார். இந்த க்யூட்டான போட்டோவுக்கு லக்ஸ் குவிந்து மகளுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.