சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மேடையில் கதறி அழுத VJ பிரியங்கா: காரணம் இதுதானா? வைரலாகும் வீடியோ..!
Author: Rajesh19 February 2023, 11:00 am
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சூப்பர் சிங்கர் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்திய எபிசோட்டில் கண்ணீர் விட்டு அழுதுள்ளது மக்களை அதிர்ச்சி செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் பிரமோ வீடியோவில், போட்டியாளர் சந்திரன் பாடி முடித்துள்ளார்.
அப்போது, சிங்கிள் அம்மாவாக இருந்து என்னையும் என் சகோதரியையும் வளர்ந்து இருக்கிறார் என சந்திரன் பேசியுள்ளார். சந்திரனின் அம்மா பேசியதில் விஜே பிரியங்கா கண்ணீர் விட்டு அழுது, சிங்கிள் parent ஆக இருக்கும் அனைவரையும் பாராட்டியிருக்கிறார். இதற்கு காரணம் பிரியங்காவின் அம்மாவும் ஒரு சிங்கிள் அம்மாவாக இருந்துதான், இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
அதற்கு பிரியங்காவிற்கு ஆறுதல் கூறி அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், அந்த ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.