விஜய் டிவிக்கு டாட்டா.. விரைவில் கிளைமாக்ஸை நெருங்கும் 4-மெகாத்தொடர்கள்.. அப்செட்டில் சீரியல் பிரியர்கள்..!
Author: Vignesh3 April 2023, 6:45 pm
வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது
அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.
ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கிறதாம். வரும் ஜுன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என 4 தொடர்களை நிறுத்துகிறார்கள் என தகவல் வந்துள்ளது.
இதைக்கேட்டு சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்றே கூறலாம்.