என் மேல கையை வெச்சு பேசறவங்கள பளார்னு அறைய தோணுது : விஜய் டிவி தொகுப்பாளர் கொந்தளிப்பு..!
Author: Vignesh21 February 2023, 8:45 pm
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், பேட்டி அளித்த ஜாக்குலின் தொகுப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், “தான் தொகுப்பாளராக இருக்கும் போது சிலர் தன் மீது கை போட்டு அத்துமீறி பேசுவார்கள் என்றும், அப்போது அவர்களை பளார் என்று அறைவிடனும் போல இருக்கும் என்றும், நிகழ்ச்சியில் விருந்தினராக வரும் சிலர் தான் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.