ரொம்ப வலிக்குது…வாந்தி வருதுன்னு சொன்னா கூட விடமாட்றாங்க – கதறும் ஜாக்குலின்!

Author: Shree
27 March 2023, 12:45 pm

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் ஜாக்குலின் பப்ளியான தோற்றம், ஜாலியான குணம், டைமிங் சென்ஸ் என்று பலரும் விரும்பும் தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கோ ஆங்கர் ரக்ஷனுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். கொஞ்சம் கீச்சுக் குரலும் இவரின் பாடி லாங்குவேஜும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். சீரியல் வாய்ப்புகள் கிடைத்த உடனே தொகுப்பாளர் வேலைக்கு டாட்டா காட்டிவிட்டார் ஜாக்குலின்.

ஆனால், அது அவருக்கு பாதியில் கைவிட்டுவிட்டது. ஆம், அவர் நடித்த சீரியல் பிளாப் ஆனது. பின்னர் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதையடுத்து உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணிக்கணக்காக ஒர்க் அவுட் செய்வதை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜிம் ட்ரைனர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய சொல்லுகிறார். என்ன முடியலன்னு சொன்னாலும் கொடுமைப்படுத்துகிறார். ஒர்கவுட் செய்வதால் என்னுடைய உடல் உள் உறுப்புகள் நுரையீரல் எல்லாம் வலிக்கிறது.

சில நேரங்களில் வாந்தி வருகிறது என்று சொன்னால் கூட விட மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் அந்த வீடியோவில் புலம்பி இருந்தார். இவரது ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CqKkMpPJSqt/?hl=en

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?