மேடம் மேடம் ஒரு போட்டோ மேடம்.. பாலிவுட் நடிகைகளை கலாய்த்த சின்னத்திரை நடிகை..! (வீடியோ)

Author: Vignesh
3 April 2024, 6:58 pm

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

vj manimegalai
vj manimegalai

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

vj manimegalai

மேலும் படிக்க: ஷிவானி கூட ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா.. பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்..!

இந்நிலையில், மணிமேகலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பாலிவுட் நடிகைகளை கேலி செய்யும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமான நிலையத்தில் பாலிவுட் நடிகைகள் வந்தால் என்ன நடக்கிறதோ அதை நகைச்சுவையாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை விமான நிலையத்திற்கு வருவதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது அதற்கு நடிகைகள் மிடுக்கென போஸ் கொடுப்பது என மணிமேகலை நடித்து அசத்தியுள்ளார்.

மேலும், விமானத்திற்கு நேரமாவதை போல் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்க சொல்லி கேட்பதைப் போன்றும், அதற்கு ஒவ்வொரு கேமராக்கும் மாறி மாறி நடிகைகள் போஸ் கொடுப்பதைக் போன்றும் அச்சு அசலாக அப்படியே செய்து காட்டியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0