என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்..!

Author: Vignesh
15 July 2023, 2:30 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

bharathi kannamma 2 -updatenews360

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாலை ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

இதைக்கேட்ட ரசிகர்கள் நல்லாதானே ஓடிட்டு இருக்கு ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

bharathi kannamma 2 -updatenews360

கிழக்கு வாசல் என்ற தொடர் புதிதாக தொடங்க இருப்பதால் டிஆர்பியில் பின் தங்கியிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ