பொறுமை இழந்த விஜே பிரியங்கா… கணவரை பிரிய வக்கீல் நோட்டீஸ் – விரைவில் விவாகரத்தா?

Author: Shree
24 July 2023, 4:31 pm

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

அதன் பின் 2021 இல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது கணவரைப் பற்றி துளி கூட பேசாமல் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட கணவரை கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் நண்பர்களுடனும், விஜய் டிவி நண்பர்களுடன் ஊர் சுற்றியும், நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் விஜே பிரியங்காவின் திருமண விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், இருவரது பிரிவிற்கும் முக்கிய காரணம் பிரியங்காவின் வளர்ச்சி தான். ஆனால் சில வருடமாக பிரச்சனைகள் தொடர்ந்து இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்தாலும் பிரியங்கா வேறு யாருடனும் நெருங்கி பழகாமல் கணவருடன் திரும்ப சேர்ந்துவிடவேண்டும் என்பதிலே எண்ணம் கொண்டிருந்தாராம்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பிரியங்கா பிரவீனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கும் பிரவீனிடம் இருந்து, இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லையாம். பிரவீன் மனசு வைத்து திரும்பி வந்தால் தான் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் விரைவில் பிரியங்கா விவாகரத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 484

    0

    0