விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
குறிப்பாக குக் வித் கமலி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அண்மையில், கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது. அண்மையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக அறிவித்தார். இந்நிலையில் தற்ப்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தி மகளின் பெயரையும் அறிவித்துள்ளார்.
குடும்பமாக இருக்கும் அழகிய போட்டோ ஒன்றை வெளியிட்டு, ” என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி… ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே.
கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை…, இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே… எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.