நான் செய்த குறும்பு…. உண்டாச்சி கரும்பு… வளைகாப்பு விழாவில் சேட்டை செய்த புகழ் – Fun வீடியோ!

Author: Shree
22 September 2023, 8:10 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

குறிப்பாக குக் வித் கமலி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமண நாளன்று புகழ் குட் நியூஸ் கூறி எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பென்சி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தற்ப்போது பென்ஸிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்தார் புகழ். அந்த விழாவில் ரீல்ஸ் வீடியோ எடுக்குறேன்னு அவர் செய்த அட்ராசிட்டியை கொஞ்சம் பாருங்களேன். செம Fun வீடியோ இதோ:

https://www.instagram.com/reel/CxfpNTzRxhA/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!