விஜய் டிவிக்கு டாடா காட்டிவிட்டு சன் டிவிக்கு தாவிய ஹீரோ..’அன்பே வா’ நடிகையின் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு..!
Author: Vignesh29 February 2024, 6:14 pm
தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சன் டிவியில் கடந்த 2020-ம் ஆண்டு சூப்பராக தொடங்கிய ஒரு தொடர் அன்பே வா. இதை, பிரைம் டைம் சீரியலான இந்த தொடரில் ஹீரோவாக விராட் மற்றும் நாயகியாக டெலினா டெவிஸ் நடித்திருப்பார்கள். 1000-எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிய இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில், தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது. ஹிட்டாக ஓடிய இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகியவர் டெல்னா.
தற்போது, அன்பே வா தொடரில் இருந்து விலகி டெல்னா இப்போது, புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். சரிகமா நிறுவனம் தயாரிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் நடிக்க டெல்னா கமிட்டாகியுள்ளார். தற்போது, இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் நடித்த சல்மான் இந்த புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இந்த தொடரின் பூஜையின் போது டெல்னா மற்றும் சல்மான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியகி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.