ஸ்டூடண்ட்டை கரம் பிடித்த விஜய் டிவி பிரபலம்….ஜாம் ஜாம்னு முடிந்த திருமணம்…!
Author: Selvan3 February 2025, 2:05 pm
கனா காணும் சீரியல் மூலம் காதலில் சிக்கிய பிரபலங்கள்
சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் தன்னுடன் நடிக்கும் சக பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: வெறித்தனமான அப்டேட்களை வெளியிட்ட STR …பிறந்த நாள் ட்ரீட் அடி போலி …!
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன சங்கீதாவும் அரவிந்தும் ஒருவையொருவர் காதலித்து வந்தனர்,இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவர்கள் நடித்த கனா காணும் காலங்கள் தொடரில் சங்கீதா சாய்,மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்,இதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.அவரிடம் பயிலும் மாணவனாக அரவிந்த் சேஜு நடித்திருப்பார்.மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மாதிரி நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவருக்கும் நடிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில் குடும்பங்கள் சம்மதத்துடன் சென்னையில் இன்று இவர்களுடைய திருமணம் விமர்சியாக நடைபெற்றது.இவர்களுடைய திருமணத்திற்கு பல சின்னத்திரை பிரபலங்கள்,நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அரவிந்த் சேஜு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.