சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2025, 4:27 pm
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
இதையும் படியுங்க: ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…
இந்த நிலையில் பத்திரனாவை பிரபல சீரியல் நடிகை நேகா காதலிப்பதாக இணையத்தில் கசிந்துள்ளது. சீரியல் நடிகை நேகா, குழந்தை நட்சத்திரமாக பல சீரியலில் நடித்தார். பைரவி, வாணி ராணி என பல தொடர்களில் நடித்த அவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகாவுக்கு நெகட்டிவ் ரோல் என்பதால் இனியாவை நிறையபேருக்கும் பிடிக்காது. இவர் பத்திரானாவை காதலிப்பதாகவும், விரைவில் இலங்கை மருமகளாக உள்ளதாக செய்திகள் பரவியது

இது குறித்து நேகா தரப்பு கூறும் போது, ஐபிஎல்லில் சென்னை அணி எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக பத்திரனாவின் பவுலிங் பிடிக்கும் என்பதால் அவருடைய வீடியோவை ரீல்ஸ்ஆக போட்டது தான் இத்தனை வதந்தி என கூறுகின்றனர்

மேலும், இப்போதெல்லாம் ஏராளமான வதந்தி பரவுவதாகவும், அவங்க இவங்களோட, இவங்க அவங்களோடனு பல வதந்தி கிளம்புது. பத்திரனா இருக்கற ரேஞ்சே வேற, அவருக்கு உலகளவுல ரசிகைகள் இருக்காங்க. தேவையில்லாம வதந்தையை பரப்ப வேண்டாம்னு நேகா தரப்பு சொல்லிருக்காங்க.
