இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் VJ ஜாக்குலின்.. – உடல் எடையை குறைத்து ஆளே மாறி போயிட்டாங்க..!
Author: Vignesh5 June 2023, 12:50 pm
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரணமாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன் மொழி பிஏ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.

என்னதான் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கும் ஜாக்குலின் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
