ஆம்பளைங்க கிட்டலாம் பேசமாட்டீங்களா தம்பி? நீச்சல் குளத்தில் இளம் பெண்களுடன் குதூகலிக்கும் ரக்ஷன் !
Author: Shree12 June 2023, 12:38 pm
விஜய் டிவியில் பல்வேறு திறமைசாலிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறார். அப்படிதான் பிரபல தொகுப்பாளராக ரக்ஷன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகியுள்ளார்.

குறிப்பாக ஜாக்குலின் உடன் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் காதல் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.
2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.
தொடர்ந்து திரைப்படம் , ஆங்கரிங் என பிசியாக இருந்து வரும் அவர் தற்போது இலங்கைக்கு ட்ரிப் அடித்து தனது பெண் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட போட்டோக்களை வெளியிட்டு கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். சில வாலிபர்கள் ரக்ஷனை பார்த்தால் பொறாமையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.