விஜய் மாநாட்டிற்கு எத்தனை கோடி செலவு செய்தார் தெரியுமா? கேள்விக்குறியான எதிர்காலம்!

Author:
29 October 2024, 4:28 pm

நடிகர் விஜய் தன்னுடைய சினிமா தொழிலை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் அதற்கான வேலைகளில் மும்முரமாக கடந்து சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தார்.

vijay

இந்த நிலையில் நடிகர் விஜயின் தலைமையில் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் விக்கிரவாண்டி வி – சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய் தன்னுடைய கொள்கைகளையும் அரசியல் பயணத்தையும் பேசி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார் .

விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஒரு சிலர் அவருக்கு விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான போஸ் வெங்கட் முன்னதாக நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திருந்தது. இந்நிலையில் தற்போதும் மீண்டும் விஜய்யின் அரசியல் பயணத்தை பற்றி பேசியுள்ளார். அதாவ்து, நடிகர் விஜய் அரசியலில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் அவர் நடித்துக் கொண்டே அரசியல் பண்ணி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவரால் தாக்குப் பிடித்திருக்க முடியும்.

vijay

ஏனென்றால் இப்போது அவர் நடிக்கவே மாட்டேன் என தன்னுடைய சினிமா தொழிலை விட்டு விட்டு முழுமையாக அரசியலில் இறங்கி விட்டார். இவர் நடத்திய இந்த முதல் மாநாட்டிற்கு கிட்டத்தட்ட ரூ. 60 முதல் 70 கோடி வரை செலவாகி இருக்கும். இதெல்லாம் சும்மா சாதாரண விஷயம் கிடையாது. ஒரு படத்திற்காக வாங்கிய 60 கோடியை இதில் போட வேண்டும். இதே போல் நான்கு மாநாடு நடத்தினால் அவரிடம் காசு
பற்றாக்குறை ஏற்படும்.

அரசியலில் செலவு பண்ண வேண்டும் என்றால் கோடி கோடியாக பணம் இழுத்துக் கொண்டு போகும். அதற்கெல்லாம் விஜய் சமாளிக்க வேண்டும் என்றால் அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பணத்தை சம்பாதித்துக் கொண்டே அரசியலில் நின்று இருக்கலாம் என்ன அறிவுரை கூறியிருக்கிறார் .

இது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. விஜய் ஏற்கனவே பணத்தை சம்பாதிவிட்டார். அவருக்கு இனிமேல் பணம் தேவையில்லை. மக்களை நம்பி இதில் இறங்கியிருக்கிறார். ஒருமுறை மாநாடு நடத்தி அரசியலில் இறங்கிவிட்டால் அவருக்காக மக்கள் ஓட்டு போட நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவரை அப்படி வீழ்த்தி விட மாட்டோம் என விஜயின் தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி போஸ் வெங்கட்டை விமர்சித்துள்ளனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 438

    0

    0